GIT Examination Application Procedure

பொதுத்தகவல்தொழில்நுட்ப பரீட்சைக்கான விண்ணப்பப்படிவங்கள் பரீட்சைத்திணைக்களத்தால் பாடசாலைகளுக்கு நேரடியாக அனுப்பப்படுவதே வழமையாகும். பாடசாலைகள் இவற்றை பூரணப்படுத்தி அனுப்பி வைக்கவேண்டும். ஆனால் முந்தய வருடம் இப்பரீட்சைக்கு ஒரு பாடசாலை விண்ணப்பித்திருந்தால் மட்டுமே பரீட்சைத்திணைக்களத்தால் படிவங்கள் அப்பாடசாலைகளுக்கு அனுப்பப்படும். துரதிஸ்ட வசமாக போர்க்கால சூழ்நிலைகளால் பல பாடசாலைகள் முந்தய வருடங்களில் பொதுத்தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கு விண்ணப்பித்திருக்கவில்லை. இதனால் இவ்வருடம் பரீட்சைத்திணைக்களத்தால் பல பாடசாலைகட்கு விண்ணப்பப்படிவம் அனுப்பப்பட்டிருக்கவில்லை. இச்சந்தர்ப்பத்தில் படிவம் பெற்றுக் கொள்ளாத பாடசாலைகள் படிவம் கிடைக்கப்பெற்ற பாடசாலைகளிலிருந்து படிவங்களை பிரதி எடுத்து விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால் இந்நடைமுறை தெரியாததால் அல்லது அலட்சியப் போக்கால் இம்முறை பல பாடசாலை மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்ற முடியாது போயிருக்கிறது. இவ்விடயத்தை மிக சிறந்த பாடமான கருதி இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் இடம்பெறாமல் இருப்பதற்கு அனைவரும் விழிப்பாக இருக்க மாகாணக்கல்வித்திணைக்களம் வேண்டுகிறது.

Advertisements

GIT Awareness Article

உயா்தரத்தில் பொதுத்தகவல் தொழில்நுட்பம் (GIT)

இற்றைக்கு ஏறத்தாழ எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் இளைஞர் யுவதிகளிடம் காணப்பட்ட தகவல் தொழில்நுட்ப அறிவானது ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிக தாழ்ந்த மட்டத்திலேயே காணப்பட்டது. இதற்கு கடந்த மூன்று தசாப்தமாக நீடித்து வந்த உள்நாட்டு சிவில்யுத்தம் ஓர் முக்கிய காரணமாக கருதப்பட்டாலும் அதனை ஒத்த வேறொரு முக்கியமான காரணமும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 2002ம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டங்களில் தகவல் தொழில்நுட்பமானது ஓர் பாடமாக உள்ளடக்கப் பட்டிருக்கவில்லை. பல்கலைக்கழக நிலைகளில் மட்டுமே அக்காலத்தில் தகவல் தொழில்நுட்பமானது போதிக்கப்பட்டு வந்தது. மேலும் போதிய வளங்கள் காணப்படாமையாலும் இத்துறை தொடர்பான நிச்சயமற்ற ஒரு நிலை காணப்பட்டதாலும் இப்பாட நெறியை பயிலும் மாணவர்களின் தொகை மிகக் குறைவாகவே காணப்பட்டது. எனவே அக்காலத்தில் இலங்கைப் பிரஜை ஒருவர் உள்நாட்டில் அடிப்படைக் கணனி அறிவினை பெற விரும்பினாலும் கூட பதினெட்டு வயது வரை காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்டது. இவ்வயதெல்லையானது மற்றைய உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது மிக உயர்வானதாகும். இப்பிரச்சனையானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கியமான பாதிப்பினை ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகள் பலமாகவே தென்பட்டன. இவ் ஆபத்தினை துரித கதியில் உணர்ந்து கொண்ட இலங்கையினுடைய கல்வி அமைச்சானது 2002ம் ஆண்டில் பாடசாலைகளின் பாடத்திட்டத்தில் தகவல் தொழில் நுட்பத்தினை ஓர் பாடமாக அறிமுகப்படுத்தியது.

  Read more of this post

Training on ICT usage in School Administration for Management Asistants / Teachers from National Schools.

தேசிய பாடசாலைகளில் நிர்வாக செயற்பாடுகளுக்கு உதவும் முகாமைத்துவ உதவியாளா்கள், ஆசிரியா்களுக்கு நிர்வாக செயற்பாடுகளில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தை பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் பயிற்சி நெறி ஒன்று 01.08.2011, 02.08.2011 ஆகிய இரு தினங்களில் வதிவிட செயலமர்வாக வவுனியா கணினி வள நிலையத்தில் நடாத்தப்பட்டிருந்தது.

கல்வியமைச்சின் வடமாகாண கல்வி அபிவிருத்தி பணிப்பாளர் திரு ராபி அவா்களின் பணிப்பின்பேரில் அவரது வழிகாட்டலில் வடமாகாணக்கல்வித்திணைக்களத்தால் இப்பயிற்சி நெறி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. வடமாகாணத்திலுள்ள 13 தேசிய பாடசாலைகளிலிருந்து 24 பேர் இதில் பங்கு கொண்டிருந்தனர்.

This slideshow requires JavaScript.

Joomla 1.6 training Workshop for ICT Resource Persons

வடமாகாண கல்விப்புலத்திலுள்ள த.தொ.தொ வளவாளர்களுக்கு உள்ளடக்க முகாமைத்துவ தொகுதி (Content Management System) பயிற்சிப்பட்டறை மாகாணக்கல்வித்திணைக்களத்தால் 16,17.07.2011 ஆகிய தினங்களில் வவுனியாவில் அமைந்துள்ள மாகாண த.தொ.தொ கல்வி நிலையத்தில் நடாத்தப்பட்டது.  Joomla 1.6 பதிப்பு இங்கு பயிற்றுவிக்கப்பட்டது. பிரதான துறைநிபுணராக திரு கெ.சா்வேஸ்வரன் அவர்கள் தொழிற்பட்டார். அனைத்து கல்வி வலயங்களுக்கும் கணினி வள நிலையங்களுக்கும் இணையப்பக்கம் வடிவமைக்கும் பொறுப்பு இதில் பங்கு பற்றியவா்களுக்கான பயிற்சியாக வழங்கப்பட்டது.

Hardware and Network Workshop at Mannar Zone

மன்னார் கல்வி வலயத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு கணினி வன்பொருட்பயிற்சி செயலமர்வு ஒன்று மாகாணக்கல்வித்திணைக்களத்தால் நடாத்தப்பட்டிருந்தது. ஜூன் மாதம் 25, 26, 27 திகதிகளில் இச்செயலமர்வு மன்னார் கணினி வள நிலையத்தில் நடாத்தப்பட்டிருந்தது. தங்கள் பாடசாலைகளில் கணினிகளில் ஏற்படும் வன்பொருள் சார்ந்த பிரச்சினைகளை இனங்காணத்தக்க இயலுமையை ஆசிரியா்களுக்கு ஏற்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கமாக இருந்தது. இப்பயிற்சியில் கலந்து கொண்ட வளவாளர்கள் ஆசிரியா்கள் மூலமாக மன்னார் கணினி வள நிலையத்தின் கணினிகளும் சீரமைத்துப்பராமரிக்கப்பட்டிருந்தன.

This slideshow requires JavaScript.

A/L ICT Practice examination Results release

தகவல் தொடா்பாடல் தொழிநுட்பத்தை உயர்தரத்தில் பிரதான பாடமாக கற்கும் மாணவா்களுக்கு முன்னோடிப்பரீட்சையாக மாகாணக்கல்வித்திணைக்களத்தால் நடாத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகள் வலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இப“பரீட்சையில் உயர்புள்ளிகளை பெற்ற முதல் பத்து மாணவா்களின் விபரம் வருமாறு.

Student Name School Marks Grade
S.Seran J/St.John’s College 74 B
P.Majurakan J/St.John’s College 60 C
S.Janani J/Methodist Girls’ High School 60 C
P.Piraveena J/Methodist Girls’ High School 59 C
K.Kobithan J/St.John’s College 57 C
A.Tharsana V/Rambaikulam Girls. MV 57 C
S.Kajenthiny V/Nelukkulam Kalai MMV 56 C
P.Arany J/Chankanai Sivapragasa M.V 55 C
T.Shanusan Mn/St.Xavier’s Boys’ College 55 C
A.Edwin Joseph Mn/St.Xavier’s Boys’ College 55 S

Recruitments to fill the Vacant in CRCs

வலய கணினி வள நிலையங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அதிபா், ஆசிரிய சேவையில் உள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வெற்றிடங்கள் காணப்படும் நிலையங்கள் பின்வருமாறு.

1. யாழ்ப்பாணம் – போதனாசிரியா்கள்  02

2. கிளிநொச்சி – முகாமையாளார் 01, போதனாசிரியா் 02

3. வவுனியா தெற்கு – முகாமையாளா் 01, போதனாசிரியா் 02

4. வவுனியா வடக்கு – போதனாசிரியா் 01

5. மன்னார் – போதனாசிரியா் 01

வலய தகவல் தொடா்பாடல் தொழிநுட்ப இணைப்பாளரிடம் மேலதிக தகவல்களை பெறலாம். விண்ணப்ப முடிவுத்திகதி 24.06.2011 ஆகும்.